’இந்திய மீனவர்களால் இரண்டு கோடி ரூபாய் நட்டம்’

இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் முறை காரணமாக, தமது வாழ்வாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றமையினால், எந்த வழியிலேனும் இந்தியக் கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்துமாறு, யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் வலியுறுத்தினர்.