இந்த நூற்றாண்டின் மறக்கமுடியாத நிகழ்வு !!

இது செய்தி என்பதை விட பல பாடங்களை உலகிற்கு கற்பித்த இந்த நூற்றாண்டின் மறக்கமுடியாத நிகழ்வு. நம்பிக்கை என்ற அந்த ஒற்றை வார்தையின் பலம் மட்டுமே 10 நாட்கள்…….முதன்முறையாக 4km தொலைவில் கண்டுபிடிக்கப்படும் வரை அவர்களை உயிரோடு வைத்திருந்தது.

நம்பிக்கை, திட்டமிடல் இந்த இரண்டும் தான் அசாத்தியமான பாதை வழி அத்தனை பேரையும் உயிரோடு மீட்டுவருவதை சாத்தியமாக்கியது. தியாகம் என்ற ஒற்றை குணம் தான் தன் உயிரை பணயம் வைத்து பல மணிநேரம் பயணித்து சுவாசத்தை அச்சிறுவன்களுக்கு வழங்கி விட்டு தாய்லாந்தின் முன்னாள் கடற்படை வீரர் Suman Gunan சுவாசத்தை பாதிவழியில் நிறுத்திக்கொண்டது.

புத்தகப்படிப்போடு மட்டும் நின்றுவிடாது
முக்குளிப்பு துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது தான் அந்த மிரட்டல் பாதைவழி Dr Richard Harris என்ற ஒரு வைத்தியனை செல்லவைத்து 13 உயிர்களின் நலனை பேணவைத்தது.

பிரார்தனை என்ற ஒற்றை வார்தை தான் 17 நாட்களாக மழைகாலத்தில் கூட மழையை கட்டுப்படுத்தி வைத்திருந்தது.

“ சாத்தியமில்லை “ என்பது எதுவுமில்லை என்பது சில சுரங்க விபத்தின் மீட்புக்கு பிறகு மறுபடியும் ஒருமுற நிரூபணம்!!

Dr Richard Harris (Australia) மீட்புப்பணியில் இறுதியாக குகையிலிருந்து வெளியேறியவர் இவர்தான். மீட்புப்பணி முடிந்து சிலமணி நேரத்தில் இவரின் தந்தையார் காலமாகிவிட்டார். இது அவருக்கு மிகப்பெரிய இழப்பாகும். நாங்களும் இந்த துயரில் பங்குகொள்வோம். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.