இனி இலங்கை முன்னோக்கிச் செல்லும்

“கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி விட்டார். இனி இலங்கை முன்னோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கிறேன்” என மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத் தெரிவித்துள்ளார். மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு கோட்டாபய புறப்பட்ட சில மணி நேரத்தில், தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனைப் பதிவிட்டுள்ளார்.