“இயேசு நாதரின் பிறந்த தினம் எனது இறப்பு தினமாக அமையட்டும்”

மட்டக்களப்பில் தொழில் இல்லாத காரணத்தால் நத்தாருக்கு பிள்ளைகள் மனைவிக்கு ஆடைவாங்கி கொடுக்க முடியாமல் மனமுடைந்த 5 பிள்ளைகளின் தந்தை ஒருவர் “இயேசு நாதரின் பிறந்த தினம்  எனது  இறப்பு தினமான அமைய வேண்டும்” எனக் கூறி தற்கொலை செய்வதற்காக கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்த நிலையில் காப்பாற்றப்பட்ட  சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (24) இரவு 11 மணிக்கு இடம்பெற்றள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.