இராஜினாமா கடிதத்தில் மஹிந்த கையொப்பம்

இராஜினாமா கடிதத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கையொப்பம் இட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  அது தொடர்பில் அடுத்த வாரம் உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. இன்று மாலை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையை அடுத்தே இராஜினாமா செய்யும் தீர்மானத்தை பிரதம‌ர்  எடுத்துள்ளதாக  அறிய முடிகிறது.