இராஜினாமா கடிதத்தை அனுப்பிய ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார். கடிதம் கிடைத்ததை சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ளதுடன், அதன் சட்டபூர்வ தன்மை கூறித்து ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதன்பின்னர் நாளைய தினம் ஜனாதிபதியின் இராஜினாமா உத்தியோகப்பூர்வமான அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.