இராஜினாமா செய்தார் பிரதமர் ஹரிரி

லெபனானின் பிரதமர் பதவியிலிருந்து சாட் அல்-ஹரிரி, நேற்று இராஜினாமா செய்துள்ளார். ஆளும் உயர் மட்டம், நாட்டை ஆழமான பிரச்சினைக்குள் தள்ளுவதற்கெதிரான பாரிய ஆர்ப்பாட்டங்களால் ஏற்பட்ட நெருக்கடியைத் தீர்ப்பதில் தான் முடிவில்லா நிலையை அடைந்துள்ளதாக சாட் அல்-ஹரிரி தெரிவித்துள்ளார்.