இராஜினாமா செய்தார் பிரதமர் ஹரிரி

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், அரசாங்கத்துக்கெதிரான ஆர்ப்பாட்டக்காரர்களால் உருவாக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட முகாமொன்றை, ஷியா முஸ்லிம்களின் ஹிஸ்புல்லா, அமல் குழுக்களுக்கு ஆதரவான குழுனொன்று தாக்கி அழித்ததைத் தொடர்ந்தே நாட்டு மக்களுக்கு ஹரிரி உரையாற்றியிருந்தார்.

அந்தவகையில், பெய்ரூட்டின் வீதிகளில் 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற மிகவும் மோசமான சம்பவமாக இது நோக்கப்படுகிறது. ஹரிரி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கெதிராக அப்போது ஏற்பட்ட ஆயுதப் போராட்டத்தில் பெய்ரூட்டின் கட்டுப்பாட்டை ஹிஸ்புல்லா போராளிகள் எடுத்திருந்தனர்.

இந்நிலையில், ஹரிரியின் இராஜினாமாவானது அதிகரித்து வரும் அரசியல் நெருக்கடியைக் காண்பிப்பதுடன், 1975-90 சிவில் யுத்தத்துக்கு பின்னரான லெபனானின் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடிய புதிய அரசாங்கத்தை அமைப்பதையும் சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களால் மூடப்பட்டுள்ள வீதிகள் மீளத் திறக்கப்பட வேண்டுமெனவும், தமது வெளிநாட்டு எதிரிகளால் ஆர்ப்பாட்டக்காரர்கள் நிதியளிக்கப்படுவதாகவும், அவர்களது நிகழ்ச்சிநிரலை அமுல்படுத்துவதாகவும் ஈரானால் ஆதரவளிக்கப்பட்ட ஹிஸ்புல்லாவின் தலைவர் சயீட் ஹஸன் நஸ்ருல்லா கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.