இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்தது “ரெட் விங்ஸ்”

ரஷ்யாவின் “ரெட் விங்ஸ்” விமான நிறுவனம் இன்று (29) முதல்  இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ளது. அதன்படி, 398 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு ரெட் விங்ஸ் விமானம் இன்று மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. “ரெட் விங்ஸ்” விமான நிறுவனம் மத்தள விமான நிலையத்திற்கு வாரத்திற்கு இரண்டு முறை விமான சேவையை முன்னெடுக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.