இலங்கைக்கு ரஷ்யா வழங்கிய வாக்குறுதி

ரஷ்யாவில் இனி இலங்கையர்கள் இராணுவ சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட மாட்டார்கள் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. ரஷ்யாவுக்கு  விஜயம் செய்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அந்நாட்டு வெளிவிவகார அமைச்சருடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இவ்வாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது.