இலங்கைப் பயணத்தை இரத்துச் செய்தார் ரஜினி

தமிழக அரசியல்வாதிகள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், தனது இலங்கைப் பயணத்தை இரத்து செய்துள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வீடுகளை இழந்து தவிக்கும் ஏழை மக்களுக்காக வவுனியாவில் கட்டப்பட்ட வீடுகளைக் கையளிக்க தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி போன்ற இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்திக்கத் தாம் இலங்கை செல்ல சம்மதித்ததாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தாம் அரசியல்வாதியல்ல எனச் சுட்டிக்காட்டியுள்ள ரஜினிகாந்த், இனிவரும் காலங்களில் இலங்கை வந்து, புனிதப்போர் நிகழ்ந்த பூமியைக் காணும் பாக்கியம் தமக்குக் கிடைத்தால், அரசியல் காரணங்களுக்காகப் போகவிடாமல் செய்து விடாதீர்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.