’இலங்கையிலிருந்து 100 தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் தமிழ்நாட்டிற்கு’

இந்தியாவின் தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கும் இலங்கையின் இராஜாங்க கல்வி அமைச்சுக்கும் இடையில், விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கையிலிருந்து 100 ​தமிழ் மொழி மூல ஆசிரியர்களை, ஆசிரியர் பயிற்சி நெறிகளைப் பெற்றுகொள்வதற்காக இந்தியாவுக்கு அனுப்பவுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.