“இலங்கையில் பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் வடக்கு” ஜனாதிபதி

காணி உரிமை வழங்கும் ‘உறுமய தேசிய வேலைத்திட்டத்தை’ ஜூன் மாதமளவில் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.  

எந்த இனத்தவராக இருந்தாலும் சட்ட ரீதியான காணி உரிமை தமக்கு கிடைக்க வேண்டும் என்பதே அனைத்து பிரஜைகளினதும் கனவாகும் என்ற வகையில், அவ்வாறான உரிமை சகலருக்கும் கிடைக்க வேண்டும் என்பதையே தான் விரும்புவதாகவும் கூறினார்.