இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை

தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் நலனுக்காக 116 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட  தமிழ்நாட்டின் 2017-2018ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசாங்கத்தால்  சமர்ப்பிக்கப்படும் முதலாவது வரவு- செலவுத் திட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.