இலங்கை: கொரனா செய்திகள்

அரசாங்கத்தால் விடுக்கப்பட்டிருக்கும் அறிவுறுத்தலின் பிரகாரம், மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை, இன்று (11) நள்ளிரவு 12 மணிமுதல் அமுலாகும் என இராணுவம் அறிவித்துள்ளது. எனினும், இந்த கட்டுப்பாடுகள் அத்தியாவசிய சேவைகளுக்குப் பொருந்தாது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான, 2,672 பேர் நேற்றையதினம் இனங்காணப்பட்டனர். அதன்பிரகாரம், சகல மாவட்டங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் உள்ளனர். ஆகக் கூடுதலாக கொழும்பு மாவட்டத்தில் 755 ​பேரும், மன்னார், முல்லைத்தீவு ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் ஆகக் குறைவாக தலா, 2 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் .