இலங்கை: கொரனா செய்திகள்

ரஷ்யாவிடமிருந்து 50 ஆயிரம் ஸ்புட்னிக் வீ கொரோனா தடுப்பூசிகள் நேற்று(27) இரவு 10.50  மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டுபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமான சேவையில் ஈ.கே. 2528 என்ற விமானத்தில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன.

கொரோனா வைரஸ் ​தொற்றை தடுப்பதற்காக ஏற்றப்படும் தடுப்பூசி செயற்றிட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுமெனத் தெரிவித்துள்ள கொவிட்-19 தொற்றொழிப்பு செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, அடுத்த செயற்றிட்டங்கள், யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் என்றார்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது, வைத்திய துறையைச் சார்ந்தவர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் என குற்றஞ் சாட்டப்பட்ட மொரட்டுவ மேயர்   சமன் லால் பெர்னாண்டோ, கல்கிஸை ​பொலிஸ் நிலையத்தில் சரணமடைந்துள்ளார்.   சரணடைந்த மொரட்டுவை மேயர் சமன் லால் பெர்ணான்டோ, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை, மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.