இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு, அம்பாறை – இறக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட வாங்காமம் பகுதியில் 05 ஏக்கர் காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, இறக்காமம் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.ரி. ஜெமீல் காரியப்பர், இன்று (13) தெரிவித்தார்.

இக்காணி, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு இறக்காமம் பிரதேச சபையால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த இடத்தை சுகாதாரப் பகுதியினர், பிரதேச செயலக அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் பார்வையிட்டுச் சென்றுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியை எதிர்பார்த்து இருப்பதாகவும், அனுமதி கிடைத்ததும் தெரிவுசெய்யப்பட்டுள்ள இடத்தில் கொவிட்-19  ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.