இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா வைரஸின் நான்காவது அலையின் முதல் பாதியை இலங்கை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனைக் கூறியுள்ளார். அத்தடன், கொழும்பில் 30 சதவீதமானோர் டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த எண்ணிக்கை 50 சதவீதமாக அதிகரிக்கக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.