இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதிக்க வேண்டும்

புதுடெல்லிக்கு விஜயம் செய்துள்ள தமிழக முதலமைச்சர் மு.கா.ஸ்டாலின், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சுமார் 30 நிமிடங்கள் சந்தித்துப் பேச்சுவார்த்ததை நடத்தினார். இதன் போது,   இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் தமிழர்களுக்கு உதவ அனுமதிக்க வேண்டும் எனவும், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் வழியாக உதவிகளை வழங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.