இஸ்ரேலியத் தாக்குதல்களில் 57 பேர் கொல்லப்பட்டனர்’

நேற்று முன்தினம் அதிகாலையில், கிழக்கு நகரான டெய்ர் அஸ் ஸோரிலிருந்து, சிரிய – ஈராக்கிய எல்லையிலுள்ள அல்-புகமல் பாலைவனம் வரையில் 18க்கும் மேற்பட்ட தாக்குதல்களை இஸ்ரேலிய வான் படை நடத்தியதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த தாக்குதல்களில் 37 பேர் காயமடைந்ததாக கண்காணிப்பகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளில், லெபனானிய ஹிஸ்புல்லா, ஈரானிய ஆதரவு ஆப்கானிஸ்தான் போராளிகளான பாத்திமா பிரிகேட் ஆகியன காணப்படுவதாக கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அமெரிக்காவால் வழங்கப்பட்ட புலனாய்வின் அடிப்படையில் தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும், ஈரானிய ஆயுதங்களை சேமித்து வைக்கும் முனையங்களை இலக்கு வைத்ததாக இத்தாக்குதல் குறித்து அறிந்த சிரேஷ்ட ஐ. அமெரிக்க புலனாய்வு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.