இஸ்ரேலுடனான தூதரக தொடர்பை துண்டித்த பொலிவியா

இஸ்ரேலுடனான தூதரக தொடர்பை துண்டித்து கொள்வதாக பொலிவியா நாடு அறிவித்துள்ளது. இது தொடர்பாக பொலிவியன் தகவல் முகமை கூறும்போது, பலஸ்தீன மக்களுக்கு எதிரான மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இதனால் இஸ்ரேலுடனான தூதரக உறவுகளை பொலிவியா துண்டித்து, காசாவுக்கு பொலிவியாவும் மனிதாபிமான உதவிகளை அனுப்ப தயாராகி வருகிறது என்று தெரிவித்துள்ளது.