ஈரான்: தண்ணீர்த் தட்டுப்பாடு தொடர்பில் ஆர்ப்பாட்டங்கள்

மோசமான தண்ணீர்த் தட்டுப்பாடு தொடர்பில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளும் மக்களுக்கு எதிராக ஈரானின் தென் மேற்கு குஸெஸ்டான் மாகாணத்திலுள்ள பாதுகாப்புப் படைகள் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளன. இப்பிராந்தியத்தில் வெப்பநிலையானது 50 பாகை செல்சியஸை தொடும் என்ற நிலையிலேயே தண்ணீர்த் தட்டுப்பாடு தற்போது நிலவுகின்றது. இந்நிலையில், ஆர்ப்பாட்டங்களானது அரசாங்கம் மற்றும் நாட்டின் மீயுயர் தலைவருக்கு எதிரானதாக மாறியுள்ளதுடன், பல்வேறு நகரங்களுக்கு பரவியுள்ளது.