ஈரோஸ் ஜனநாயக முன்னணி!?

ஈழப் புரட்சி அமைப்பினால் ஈரோஸ் ஜனநாயக முன்னணி என்ற புதிய அரசியல் கட்சி அறிவிக்கப்பட்டது. முன்னாள் ஈரோஸ் அமைப்பின் ஆர்.ராஜேந்திரா தலைமையில் நடைபெற்ற இந்த ஈரோஸ் ஜனநாயக முன்னணி எனும் அரசியல் கட்சி அறிவிப்பு நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட ஈரோஸ் அமைப்பின் முன்னாள் தோழர்கள் கலந்து கொண்டிருந்தனர். வடக்கு கிழக்கு மலையக மக்களின் தற்கால தேவைகளை உணர்ந்து ஈரோஸ் ஜனநாயக முன்னணி எனும் அரசியல் கட்சியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்ற இந்த நிகழ்வில், வெளிநாடுகளிலிருந்தும், வடக்கு – கிழக்கின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், மற்றும் மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் செயலாளர் ஆர்.ராஜேந்திரா பிரகடனத்தினை வாசித்து கட்சியினை அறிவித்தார்.