ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நீர்வை பொன்னையன் காலமானார்

ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவரான நீர்வை பொன்னையன் சற்றுமுன்னர் காலமானார். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல படைப்புகளை ஈழத்து இலக்கிய உலகுக்கு தந்த இவர், ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர்.