ஈழத்திற்காக போராடிய அனைத்து போராட்ட இயக்கங்களையும் ஒன்றினயுமாறு அறைகூவல்

வவுனியா கனகராயன் குளத்தில் ஈழவர் புரசிகர விடுதலை முன்னனியின்(ஈரோஸ்) வித்தாகி போன போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு கடந்த 22.07.2018 மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது இவ் அஞ்சலி நிகழ்வை ஈரோஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் துஷ்யந்தன் அவர்கள் தலைமை தாங்கினார் மேலும் நிக்ழ்வின் ஆரம்பமாக ஈகை சுடரினை ஈரோஸ் அமைப்பின் வித்தாகி போன மூத்த போராளி ஒருவரின் தாயார் ஏற்றிவைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் தொடர்ந்தும் மறைந்த போராளிகளின் திருவுருவ படங்களுக்கு பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய துஷ்யந்தன் அவர்கள் ஈழபோராட்டத்தில் ஈழவிடுதலைக்காக களமாடிய ஈழவிடுதலை இயக்கங்களை தமிழ்பேசும் அனைத்துமக்களுக்காக எதிர்பார்ப்புக்களின்றி ஒன்றிணையுமாறு அறைகூவல் விடுத்திருந்தார் மேலும் இவ் அஞ்சலி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், சிறிரெலோ கட்ச்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா,முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ராஜகுகனேஸ்வரன், புளொட் அமைப்பின் வெங்கலசெட்டிகுள பிரதேச சபை உறுப்பினர் சிவம், நகரசபை உறுப்பினர் காண்டீபன், தமிழ் விருட்சத்தின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், செயலாளர் ஜெகன், ஆகியோருடன் ஈரோஸ் அமைப்பின் மூத்த போராளிகள், முக்கியஸ்தர்கள்,பொதுமக்கள் என பல்ரும் கலந்து கொண்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்வை அனுஷ்டித்தனர்.