உக்ரேன்: ரஷ்யாவை ஐ. அமெரிக்கா, ஜி7 பொறுப்புக்கூற வைக்கும் – பைடன்

இன்று காலையில் ஜி7 நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கவுள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்யாவுக்கு எதிரான மேலும் தாக்கமான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளார். உக்ரேனுக்கெதிராக போரை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆரம்பித்த பின்னரே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.