உக்ரைனின் கிழக்கே டொன்பாஸில் தனி நாடுகளுக்கு புடின் அங்கீகாரம்!

பாதுகாக்க ரஷ்யப் படைகள் செல்லும்?

பூகோள அரசியல் போட்டியால் பூமிப் பந்தில் புதிய தேசங்கள்..

உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில்- டொன்பாஸ் பிராந்தியத்தில்-கிளர்ச்சியாளர்களது கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு நிலப்பிரதேசங்களைத் தனி நாடுகளாக அங்கீகரித்திருக்கிறது ரஷ்யா. அதிபர் விளாடிமிர் புடின் நாட்டுக்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில் தனிநாட்டு அங்கீகாரணத்துக்கான பிரகடனத்தில் ஒப்பமிடவுள்ளார் என்பதை அறிவித்திருக்கிறார்.