உக்ரைனுடன் கை கோர்த்த ‘எலோன் மஸ்க்‘

இந்நிலையில் ரஷ்யப் படையினரால் உக்ரைனில் இணைய சேவைகள் வழங்கி வந்த நிறுவனங்களின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால்,  தங்கள் நாட்டிற்கு இணைய சேவை வழங்குமாறு உக்ரைனின் துணை பிரதமர் மைக்கைலோ பெடோரோவ்,  உலக பணக்காரர்களில் ஒருவரும்  டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகரும், அதன்  தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க்கிடம் (Elon musk)   கோரிக்கை விடுத்தார்.

இந் நிலையில்  உக்ரைனுக்கு உதவும் வகையில் ”தனது நிறுவனமான ‘ஸ்டார்லிங்க்‘  மூலம் இணைய சேவையை உக்ரைனுக்கு வழங்குவதாக” எலோன் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதே போல் கூகுல் நிறுவனம் உக்ரைன் மீது  ரஷ்யா தொடுத்து வரும் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கூகுள் இணையதளங்களிலும், கூகுளுக்கு சொந்தமான அப்கள் மற்றும் யூடியூப் உள்ளிட்டவற்றிலும் ரஷ்யாவின் நாட்டின் அரசு மற்றும் தனியார் ஊடகங்கள் விளம்பரங்கள் மூலம் பெறும் வருமானத்திற்கு தடை விதித்துள்ளது.

 இத் தகவலை கூகுள் நிறுவனத்தின் தலைமை அமைப்பான ஆல்பாபெட் அறிவித்துள்ளது.