உயிரிழப்பு ஒரு இலட்சம் தாண்டியது

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கிலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டியுள்ளது. இலங்கை நேரப்படி இரவு 9.50 மணிவரை உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100,174ஆகவும், வைரஸ் தொற்றுக்கிலக்காகியவர்களின் எண்ணிக்கை 1,639,993ஆகவும் பதிவாகியுள்ளது.