உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 260 முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை 260 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் சட்ட விதிமுறைகள் தொடர்பில் சுமார் 245 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

தேர்தல் வன்முறைகள் தொடர்பில் மேலும் 9 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

42 முறைப்பாடுகள் கொழும்பில் பதிவாகியுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் 26 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியமை தொடர்பில் இதுவரையில் 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றைய தினத்தில் மாத்திரம் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டனர்.

இதேவேளை தேர்தல் தொடர்பிலான பொலிஸ் நடவடிக்கைப் பிரிவிற்கும் 80 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.