உள்வீட்டு முரண்பாடு உக்கிரம்: பசிலுக்கு கடும் ஏச்சு

எனினும், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இராஜினாமா கடிதத்தில் கையொப்பம் இடவில்லை இன்றேல் மறுத்துவிட்டார்  என அறியமுடிகின்றது.

அத்துடன், அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன ஆகியோரும் கையொப்பம் இடவில்லையென அறியமுடிகின்றது.

இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கடுமையாக திட்டியுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று (04) காலை சந்திக்கின்றார்.