ஊடக சந்திப்பு

பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியம்
වැවිලි ශ්‍රම යිති මුහය
Plantation Labour Rights Confederation
152 1/3 Hulftsdorp Street, Colombo 12
plantationlabour@gmail.com 071-6275459
10-09-2018

பிரதம ஆசிரியர்
மதிப்புக்குரிய ஐயா/அம்மணி,
ஊடக சந்திப்பு
பெருந்தோட்ட கூட்டு ஒப்பந்தமும் தொழிலாளர்களின் சம்பள உரிமையும்
திகதி: 12-09-2018
நேரம்: பி.ப. 2.00 மணிக்கு
இடம்: பிரைட்டன் ரெஸ்ட் இல. 214ஃ2, மெசஞ்சர் வீதி, கொழும்பு 12.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உரிமை உட்பட தொழில் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியம் நடத்தும் மேற்படி ஊடக சந்திப்பில் பின்வரும் விடயங்கள் வலியுறுத்தப்படவுள்ளன.
• 15-10-2018ஆம் திகதியுடன் பழைய சம்பள கூட்டு ஒப்பந்தமானது அமுலில் இருந்து இரண்டு வருட காலம் முடிவடையும் நிலையில், புதிய சம்பள கூட்டு ஒப்பந்தத்தை ஒக்டோபர் மாதம் 16 திகதிக்கு முன்னர் அமுல்படுத்துமாறு உரிய தரப்புகளுக்கு அழுத்தம் கொடுத்தல்.
• பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாக ஒன்றியத்தின் நிலைப்பாடு.
• பெருந்தோட்டத் தொழிலாளர்களும் மக்கள்சார்பு அமைப்புகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்.

எனவே, அச் சந்திப்பில் உங்களது மேலான ஊடகத்தின் ஊடகவியலாளரை கலந்துகொள்ள ஏற்பாடு செய்து, அவ்வூடக சந்திப்பு பற்றிய செய்திகளை மக்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இப்படிக்கு
சட்டத்தரணி சு.விஜயகுமார்
அழைப்பாளர்
071-6275459