ஊரடங்கு தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு!

கொழும்பிலும், புறநகர்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை ஐந்து மணியுடன் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொழும்பு – மிரிஹான பகுதியில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிட்டு பொது மக்கள் போராட்டம் முன்னெடுத்த நிலையில், கொழும்பில் பல இடங்களில் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.