‘ஊழல் இல்லாத கூட்டணியுடன் போட்டி’

ஊழல் இல்லாத கூட்டணியுடன் ஜனாதிபதி தேர்தல் போட்டியில் களமிறங்கியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் உள்ளுராட்சிமன்ற பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.