எதியோப்பிய திக்ரேயில் மோதல்கள்

திக்ரேயின் பிராந்தியத் தலைநகரான மெகெல்லேயை அரசாங்கம் கைப்பற்றியதைத் தொடர்ந்து மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக எதியோப்பியப் பிரதமர் அபி அஹ்மட்டின் அரசாங்கம் தெரிவிக்கின்றபோதும், மெகெல்லேக்கு வெளியே மோதல் இன்னும் இடம்பெறுவதாக முன்னணியின் தலைவர் டெப்ரெட்சியோன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொதுமக்களின் சொத்துக்கள், ஹொட்டல்களை அரசாங்கப் படைகள் கொள்ளையடிப்பதாகவும், கொள்ளையடித்ததைத் தொடர்ந்து தொழிற்சாலைகளை சேதப்படுத்துவதாக முன்னணியின் பேச்சாளர் கெடசியூ றெடா கூறியுள்ளார்.