எதிர்க் கட்சித் தலைவராக சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் பதவி உள்ளிட்ட சகல காரணங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி, இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்காக, ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட நாடாளுமன்றக் குழுக்கூட்டம், தற்போது நடைபெற்று வருகின்றது.

இதன்போது, எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை முன்மொழிவதற்கு கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க மற்றும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

அத்துடன், கட்சியின் புதிய தலைவர் தொடர்பில் பின்னர் தீர்மானிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.