எம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் – அனுரகுமார

ஊழல், மோசடிகள் நிறைந்த காலாவதியான ஆட்சியை மீண்டும் உருவாக்க வேண்டுமா அல்லது சகல மக்களையும் ஒன்றிணைத்து தேசிய ஐக்கியத்துடன் கூடிய புதிய ஆட்சியை உருவாக்க வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்கும் முக்கியமான சூழலில் மக்கள் உள்ளனர். இப்போது மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் எம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் எனவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.