எரிக் சொல்ஹெய்மின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட TO END A CIVIL WAR என்ற புத்தகத்தில் இருந்து……

2.தேர்தல் முடிந்த மூன்று மாதங்களில் ராஸபக்ஸ அரசு வட பகுதி வீடமைப்புத் திட்டத்திற்கென பல மில்லியன் ருபாய் ஒதுக்கியுள்ளதாக அறிவித்தது.

அப் பணம் புலிகளால் குறிப்பிடப்படும் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.
2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இவை தீர்மானிக்கப்பட்டன.

அதற்கு முன்பதாகவே எமில் காந்தனால் வழங்கப்பட்ட பொய் கம்பனி வங்கிக் கணக்கிற்கு 150 மில்லியன் ருபாய் ஏற்கெனவே வழங்கப்பட்டது பின்னர் நடத்திய விசாரணைகளில் அது தெரியவந்தது.

3.மாவிலாறு போர் நடந்து கொண்டிருக்கும் பொழுதே 130 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ரிரான் அலஸ் பொலீசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் 2005ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் பஸில் ராஜபக்ஸ, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் ஜயசுந்தர ஆகியோர் தமிழ்ச்செல்வன் குழுவினருடன் பேசி, அரசாங்கம் புலிகளுக்குப் பணத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகளை ரிரான் அலஸ் மேற்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.