எரிபொருளை விநியோகிக்க அமெரிக்க நிறுவனம் வருகிறது

ஆர்.எம். பார்க்ஸ் நிறுவனம் 110 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது.

உலகின் முன்னணி பெட்ரோலிய நிறுவனமான ஆர்.எம். பார்க்ஸ், இந்த உடன்படிக்கையின் மூலம் பார்க்ஸ் கம்பனிக்கு ஜெல் தயாரிப்புகளை இலங்கையில் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கவுள்ளதுடன் அதற்கமைவாக எதிர்காலத்தில் ஆர்.எம். பார்க்ஸ் மற்றும் ஜெல் இணைந்து 200 பெட்ரோல் நிலையங்களை திறக்கும்.

அந்த பெட்ரோல் நிலையங்களில் சூப்பர் ஸ்டோர்கள், மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதிகள் உள்ளிட்ட பல வசதிகளை ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply