எழுக‌ த‌மிழ் நிக‌ழ்வையும் முன் நின்று ந‌ட‌த்திய‌வ‌ர் ஆவா குழு உறுப்பினர்

தீவிர‌ புலி ஆத‌ர‌வு அர‌சிய‌ல் பேசும் த‌மிழ் தேசிய‌ ம‌க்க‌ள் முன்ன‌ணிக்கும், இராணுவ‌ புல‌னாய்வுத் துறைக்கும் தொட‌ர்பிருக்க‌லாம் என‌ நீண்ட‌ கால‌மாக‌ ச‌ந்தேக‌ம் இருந்த‌து. த‌ற்போது அது ஆதார‌பூர்வ‌மாக‌ நிரூபிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. யாழ்ப்பாண‌த்தில் ஆவா குழுவை சேர்ந்த‌ அறுவ‌ர் கைது செய்ய‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். கொழும்பில் இருந்து சென்ற‌ ப‌ய‌ங்க‌ர‌வாத த‌டுப்புப் பொலிஸ் விசேட‌ பிரிவின‌ரின் விசார‌ணைக‌ளின் பின்ன‌ரே கைது ந‌ட‌வ‌டிக்கை இட‌ம்பெற்ற‌து. கைது செய்ய‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ளில் ஒருவர் இராணுவ‌த்தை சேர்ந்த‌வ‌ர். இன்னொருவ‌ர் சைக்கிள் க‌ட்சி என்று அழைக்க‌ப் ப‌டும் க‌ஜேந்திர‌குமார் த‌லைமையிலான‌ த‌மிழ்த் தேசிய‌ ம‌க்க‌ள் முன்ன‌ணியின் செய‌ற்பாட்டாள‌ர். இவ‌ர் எழுக‌ த‌மிழ் நிக‌ழ்வையும் முன் நின்று ந‌ட‌த்திய‌வ‌ர் என்ப‌து குறிப்பிட‌த் த‌க்க‌து.

ஆவா குழு சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டவர்கள்.1. சிவலிங்கம் கபில்நாத் (கொக்குவில்)2. கெங்காதரன் பிருந்தாபன்(திருநெல்வேலி)3. அலெக்ஸ் அரவிந்தன்(சில்லாலை, சைக்கிள் கட்சிக்காரர், படத்திலிருப்பவர்.)4&5. E. கபிலோஷன் E. நிரூஷன் சகோதரர்கள்(இணுவில்).மீதி 3 வரின் பெயர்கள் விரைவில்.

இனி என்ன இது சம்சும் குழுவினரின் சதி… அரசுடன் இணைந்து தமக்கு எதிராக துரொகம் செய்துவிட்டனர் என்று கூறப் போகின்றனர் எழுக தமிழ்க்காரர். சம்சும் இற்கும் குண்டு துளைக்காத காரை பரிசாக ரணில் கொடுத்து இதனை உறுதி செய்வதற்கு வேண்டிய ஜே.ஆரிடம் கற்றுக் கொண்ட நரித்தனத்தை அரகேற்றுவர் இவர். அரசியல் அமைப்பில் தமிழருக்கு உரிமை வழங்கப்படாமைக்கு காரணம் சம்சும் குழுவினரே தாங்கள் அல்ல என்று ‘சாணக்கpய’ காய் நகர்த்தலை மேற்கொள்வர் ரணில் குழுவினர். புதிய தேசியத்தலைவர் இலாகா இல்லாத அமைச்சராக வாழ் நாள் பூராக வலம் வருவார்