ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைகிறது உக்ரேன்?

27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் முயற்சிகளில் உக்ரேன் ஈடுபட்டு வந்தது.  அதற்கான விண்ணப்பத்தில் உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்சி திங்கள் கிழமையன்று கையெழுத்திட்டார். தொடர்ந்து  ஐரோப்பிய பாராளுமன்றத்தில் காணொலி மூலம் அவர் உரையாற்றினார்.