ஐ. அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிலிருந்து சாண்டர்ஸ் விலகல்

ஐக்கிய அமெரிக்காவில் இவ்வாண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான போட்டியிலிருந்து ஐக்கிய அமெரிக்காவின் செனட்டரான பேர்ணி சாண்டர்ஸ் இன்று விலகியுள்ளார். அந்தவகையில், இவ்வாண்டு நவம்பர் மாதம் மூன்றாம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் உப ஜனாதிபதி ஜோ பைடன் எதிர்கொள்வார் எனக் கருதப்படுகிறது.