ஐ.எஸ். தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹஸ்மி அல் குராய்சி குண்டை வெடிக்கவைத்து உயிரிழப்பு. அமெரிக்க படையால் சுற்றிவளைக்கப்பட்டார்

அமெரிக்காவின் விசேட படைப்பிரிவினர் சிரியாவின் மேற்குபகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு விசேட நடவடிக்கையில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹஸ்மி அல் குராய்சி கொல்லப்பட்டுள்ளார்.
தங்களது படைகளால் சுற்றிவளைக்கப்பட்டவேளை ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹஸ்மி அல் குராய்சி குண்டைவெடிக்கவைத்ததாகவும், அவரும் அவரது குடும்பத்தினரும் இதன்போது கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.