ஐ.நா.,வில் இன்று ஆலோசனை

‘வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு, அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், கொரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்து நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் உள்ளரங்கு கூட்டம், இன்று ( 9) நடக்க உள்ளது.

இதில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலமாகவும் பிரதிநிதிகள் பங்கேற்கஉள்ளனர்.