ஒரே நாளில் பல தாக்குதல்கள் திட்டம்; வெற்றியளிக்காமைக்கான காரணம் வெளியானது

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) தற்கொலைத் தாக்குதல்களுக்கு முன்னதாக, தற்கொலைக் குண்டுதாரிகளின் சூத்திரதாரியான சஹ்ரான் காஸிமின் சகாக்களுக்கிடையே இடம்பெற்ற சில கருத்து மோதல்கள் காரணமாக, அன்றை தினம் நடத்தப்படவிருந்த மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படாமல் தவிர்க்கப்பட்டதாகத் தெரியவருகிறது.