ஓமந்தையை மாசுபடுத்தும் தொழிற்சாலை மீது நடவடிக்கை

வவுனியா – ஓமந்தையில் இயங்கும் ஈயத்தொழிற்சாலையால் இயற்கை மாசுபடுத்தப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைவாக, குறித்த தொழிற்சாலையின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அங்கு சென்று நேரடியாக பார்வையிட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.