கடன் மறுசீரமைப்பு பேச்சை ஆரம்பித்தது இந்தியா

இலங்கையுடனான தனது கடனை மறுசீரமைப்பது குறித்து இந்தியா பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.  இந்த பேச்சுவார்த்தைகள் கடந்த 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,  இலங்கைக்கு நீண்ட கால அடிப்படையில் உதவத் தயார் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.