‘கடலுணவு உற்பத்தியின் கேந்திர நிலையமாக தீவகப் பகுதி மாறும்’

காரைநகர் சீனோர் நிறுவனத்துக்கு, நேற்று (21) சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அத்துறைசார் பொதுமக்களுடன் கலந்துரையாடிய போதே, இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், தீவகப் பிரதேசத்தில், கடல் வளத்தைக் கொண்டு, பல்வேறுபட்ட தொழிற்றுறைகளை மய்யப்படுத்திய விசேட திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதன்பிரகாரம், காரைநகர் சீனோர் நிறுவனத்தை மய்யப்படுத்தியதாக இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கமைய, இப்பகுதியில், எரிபொருள் நிரப்பு நிலையம், ஐஸ் தொழிற்சாலை, படகு கட்டுமாணம், போக்குவரத்துக்கான இறங்குதுறை மீளமைத்தல், நேரடி மீன் விற்பனைக்கான சந்தை வசதி உள்ளிட்ட துறைகளை ஒன்றிணைத்து இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், அவர் கூறினார்.

இதனூடாக, தீவகப் பகுதியை, ஒரு கடலுணவு உற்பத்தியின் கேந்திர நிலையமாகவும் உருவாக்கிக் கொள்ள முடியுமு​டியுமெனவும், அவர் தெரிவித்தார்.

RECOMMENDED