கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம்(ஒபர்), நடிகர் விஷால் நிவாரண உதவி

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நடிகர் விஷால் மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஒபர் தொண்டு நிறுவண ஒருங்கிணைப்பாளர் பூங்கோதை சந்திரகாசன் நிவாரண பொருட்கள் வழங்கினர். சிதம்பரம் அருகே உள்ள மேலகுண்டலபாடி,கூத்தன்கோயில்,ஜெயம்கொண்டபட்டினம்,சாலியங்தோப்பு,விளாகம் ஆகிய கிராமங்களில் திரைப்பட நடிகர் சங்கம் ஒபர் தொண்டு நிறுவனம் இணைந்து நிவாரண பொருட்கள் வழங்கினர். நடிகர் சங்க பொதுச் செயலாளர் நடிகர் விஷால் மற்றும் தொண்ட நிறுவனத்தைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் பூங்கோதை சந்திரகாசன் ஆகிய இருவரும் நிவாரண பொருட்களை வழங்கினர்.

ஊராட்சி மன்ற தலைவர்கள் சந்தனகுமார், புவனேஸ்வரி, மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மொத்தம் 1250 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
நிவாரணப் பொருட்களை வழங்கிய பின்னர் நடிகர் விஷால் கூறும்போது “நான் இங்கு ஒரு சாதாரண மனிதனாக வந்துள்ளேன்.நடிகராக அல்ல,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளேன்.ஒவ்வொருவரும் ஒருவருக்கு உதவி செய்தாலே இந்த பாதிப்பில் இருந்து இலகுவாக மீண்டு விடலாம்.ஒபர் தொண்டு நிறுவனமும் உதவி செய்து வருகிறது.வெள்ளத்தால் பள்ளி மாணவ,மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களை உற்சாகப்படுத்தி பழைய வாழ்க்கை வாழ வழிவகை செய்ய வேண்டும்.தொண்டு நிறுவனம் மூலம் சுய உதவிகுழுக்களுக்கு சுழல்நிதி ஏற்படுத்தி தரப்படும் என்றார்.