கட்டாய தடுப்பூசிக்கு எதிராக கனடாவில் போராட்டம்- ரகசிய இடத்திற்கு தப்பிச் சென்ற பிரதமர்

ஒட்டாவா ,கனடாவில் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டாய தடுப்பூசி மற்றும் பிற கொரோனா விதிமுறைகளுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனைத்து நாடுகளும் கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன. மேலும் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றன.